×

தலைவாசல் பைபாஸ் சாலையில் புல், புதர் மண்டிகிடப்பதை சீரமைக்க வலியுறுத்தல்

ஆத்தூர், நவ.29: சேலம் மாவட்டம் தலைவாசலில் தேசிய நெடுஞ்சாலையின் அருகே காய்கறி தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
 இந்த மார்க்கெட்டிற்கு சென்னை, விழுப்புரம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட வியாபாரிகளும், தலைவாசல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட விவசாயிகளும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மார்க்கெடிற்கு வரும் சர்வீஸ் சாலையின் ஓரத்தில் ஏராளமான புல், புதர்கள் முளைத்துள்ளது. இதனால் மார்க்கெட்டிற்குள் விஷஜந்துகள் நுழைகின்றன. இரவு மற்றும் அதிகாலையில் வரும் வியாபாரி, விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 அதிகளவில் வளர்ந்துள்ள புற்களை அகற்ற உள்ளாட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல் தேசிய நெடுஞ்சாலை பராமரிப்புக்குழுவிடமும் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு வியாபாரிகளும், விவசாயிகளும் வருவதை தவிர்க்கும் சூழ்நிலை நிலவுகிறது. எனவே உடனடியாக சாலையின் ஓரத்தில் வளர்ந்துள்ள புற்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைவாசல் விவசாய சங்கத்தினர் கலெக்டர் மற்றும் ஒன்றிய ஆணையாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : revitalization ,road ,
× RELATED சுந்தராபுரம்-மதுக்கரை சாலை பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து