×

மேகதாது அணைக்கு ஒப்புதல் தமிழக விரோத போக்கு: எஸ்டிபிஐ கண்டனம்

சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக்  கட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் மற்றும் திட்டப்பணிகள் உள்ளிட்ட தகவல்களுடன் கூடிய, கர்நாடக மாநில அரசின் வரைவு அறிக்கைக்கு, மத்திய  நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.  தமிழக அரசு முன்வைக்கும் ஒவ்வொரு கோரிக்கையும் தொடர்ந்து  நிராகரித்து, மாற்றாந்தாய் மனப்போக்குடன் செயல்படுகிறது மத்திய பாஜ அரசு.

மத்திய அரசின் தமிழக புறக்கணிப்பு என்பது நீட் தேர்வு தொடங்கி, வறட்சி, புயல் பாதிப்பு நிவாரண நிதி வரை அந்த புறக்கணிப்பு தொடர்ந்த நிலையில்,  தற்போது மேகதாது அணை விவகாரத்திலும் தமிழகத்தின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் பாஜகவின் கர்நாடக வாக்கு  அரசியல் உள்ளது.   காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் காவிரி என்பது தமிழகத்துக்கு கானல் நீராகிப் போகும். மத்திய நீர்வள  ஆணையத்தின் இந்த நடவடிக்கையால், லட்சக்கணக்கான டெல்டா விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே, மேகதாது அணை கட்டுவதற்கான  முதல்கட்ட ஆய்வுகளுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : dam ,Meghadad ,SDPI ,
× RELATED மூணாறு அணையில் பேட்டரி படகு சவாரி: சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு