×

கொச்சுவேளி ரயிலுக்கு மாற்று ஏற்பாடு கன்னியாகுமரி - சென்னை எக்ஸ்பிரஸ் சரியான நேரத்தில் புறப்படும் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

நாகர்கோவில், நவ.28:  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அலுவ லக செய்திகுறிப்பு: கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் எண் 12633/12634 கன்னியாகுமரி - சென்னை சமீப காலமாக கன்னியாகுமரியில் இருந்து தாமதமாக புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் பெட்டிகள் சென்னையில் இருந்து வந்த பிறகு கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் கொச்சுவேளிக்கு பயணிகள் ரயிலாக சென்று வந்து கொண்டிருந்தது இதற்கு காரணம் ஆகும்.

அதனுடைய தாமதம் மற்றும் சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களால் கன்னியாகுமரி சென்னை விரைவு ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டு பயணிகளுக்கு ெபரும் அசவுகரியமாக இருந்து வந்தது. மத்திய நிதி மற்றும் கப்பல்துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ரயில்வே துறை அமைச்சரிடம் கேட்டுக்கொண்டதின் விளைவாக 28ம் தேதி (இன்று) முதல் பாசஞ்சர் ரயிலாக கொச்சுவேளிக்கு செல்வது மாற்று ஏற்பாடு செய்யப்படுவதுடன் கன்னியாகுமரி - சென்னை விரைவு ரயில் குறித்த நேரத்தில் புறப்படும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அறிவித்துள்ளார். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kanyakumari ,
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...