×

ஊட்டி தாவரவியல் பூங்காவில் டிராகன் மரங்கள் இட மாற்றம்

ஊட்டி, நவ. 28: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் டாப் கார்டன் பகுதியில் இருந்த டிராகன் மரம் வேறோடு பெயர்த்து வந்து கண்ணாடி மாளிகை பகுதியில் வைக்கப்பட்டது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நூற்றாண்டு பழமை வாய்ந்தது.கடந்த 120 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட இந்த பூங்காவில் பல்வேறு வகையான மரங்கள், செடி, கொடிகள், பெரணி, மூலிகை தாவரங்கள் உட்பட பல்வேறு வகையான தாவரங்கள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலான மரங்கள் வெளி நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டவை. சில தாவரங்கள் மற்றும் மரங்கள் நூற்றாண்டு பழமை வாய்ந்தவை. இதில், கேனாரி தீவுகளை தாயகமாக கொண்ட டிராகன் மரங்கள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மரங்கள், ெதன்னை மரங்களை போன்று காணப்பட்டாலும், அடர் பழுப்பு நிறம் கொண்டவை.

அழகு தாவரங்கள் வகைகளை கொண்ட இந்த மரம் பூப்பதோ அல்லது காய்ப்பதும் இல்லை.  இந்த மரங்கள் அழகான தோற்றம் தரும் நிலையில், பூங்காவில் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்தது. வயது மூப்பின் காரணமாக இவைகளில் ஒரு சில மரங்கள் காய்ந்து போய்விட்டன. மேலும், கண்ணாடி மாளிகை அருகில் வைக்கப்பட்டிருந்த மரங்கள் கட்டுமான பணியின் போது உடைக்கப்பட்டது. சேதம் குடைந்த இந்த மரங்கள் அகற்றப்பட்ட நிலையில், தற்போது டாப் கார்டன் பகுதியில் இருந்து புதிதாக இரு டிராகன் மரங்கள் வேறோடு பெயர்த்து எடுத்து வரப்பட்டு தற்போது கண்ணாடி மாளிகை முன்புறம் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த மரங்கள் விரைந்து உயிர் பிடிக்கும் என்பதால், 15 ஆண்டுகள் பயமை வாய்ந்த இந்த மரங்கள் தற்போது நடவு செய்யப்பட்டு வருகிறது. வேறோடு மரங்களை பெயர்த்து வந்து, மீண்டும் நடவு செய்யும் பணிகளை மேற்கொண்டதை சுற்றுலா பயணிகள் பலரும் வியப்புடன் பார்த்து சென்றனர்.

Tags : Dragon Trees Transfer ,Ooty Botanical Zoo ,
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்காவில் புதிய கார்னேசன் மலர் அலங்காரம்