×

குகன்பாறை-செவல்பட்டி சாலையில் குறுகிய பாலத்தால் விபத்து அச்சம் அகலப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை

சிவகாசி, நவ. 28: வெம்பக்கோட்டை அருகே, குகன்பாறை-செவல்பட்டி சாலையில், குறுகிய பாலத்தால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. பாலத்தை அகலப்படுத்தி, ஒளிரும் ஸ்டிக்கர்களை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே, குகன்பாறை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து கோவில்பட்டி, சங்கரன்கோவிலுக்கு செல்லும் சாலையில் உள்ளது. சங்கரன்கோவிலில் உள்ள கோயிலுக்கு செல்லும் மதுரை, விருதுநகர், சிவகாசி க்தர்கள் இந்த சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர். மேலும், வாகனப் போக்குவரத்தும் அதிகமாக உள்ளது. இந்த சாலையில், குகன்பாறை-செவல்பட்டி இடையே குறுகலான பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாலத்தில் இரண்டு வாகனங்கள் எதிரெதிரே வரும்போது விபத்து அபாயம் உள்ளது. எனவே, இந்த பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். பாலத்தின் ஒருபுறம் சிமெண்ட் தடுப்பும், மறுபுறம் இரும்பு தடுப்பும் அமைத்துள்ளனர். இந்த தடுப்பில் விபத்து எச்சரிக்கை ஸ்டிக்கரும் இல்லை. இரவு நேரங்களில் வாகனங்கள் பாலத்தை கடந்து செல்லும்போது, தடுப்புக் கம்பி இருப்பது தெரிவதில்லை. “ இதனால், வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. இதேபோல, சிமெண்ட் தடுப்புச்சுவரை சுற்றி முட்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. கவனக்குறைவாக வரும் வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, குகன்பாறை-செவல்பட்டி சாலையில் உள்ள பாலத்தை அகலபடுத்தி விபத்து எச்சரிக்கை ஸ்டிக்கர்களை ஒட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Motorists ,bridge ,road ,Guganpara-Chevalpatti ,
× RELATED கட்டி முடிக்கப்பட்ட 6 மாதத்தில்...