×

நல்லம்பாக்கம் ஊராட்சியில் பூட்டியே கிடக்கும் சிறுவர் பூங்கா, உடற்பயிற்சி கூடம்

கூடுவாஞ்சேரி, நவ.28: நல்லம்பாக்கம் ஊராட்சியில் சிறுவர் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் பயன்பாடில்லாமல் உள்ளது.இதனால் 30 லட்சம் மக்கள் பணம் வீணாகியிருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளானர். சென்னை வண்டலூர் அடுத்த நல்லம்பாக்கம் ஊராட்சியில் கண்டிகையில் இருந்து நல்லம்பாக்கம் செல்லும் பிரதான சாலையோரத்தில் கிராம சேவை மைய கட்டிடம் மற்றும் அங்கன்வாடி மையம் உள்ளது. இதன் மத்தியில் தமிழக அரசு சார்பில், 30 லட்சம் மதிப்பில் அம்மா உடற்பயிற்சி கூடம், அம்மா சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை இவை திறக்கவில்லை. இதனால் பூங்காவில் உள்ள சிறுவர் பூங்கா, உடற்பயிற்சிகூடம் சரிவர கட்டப்படாததால் சிதிலமடைந்து வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: நல்லம்பாக்கத்தில் ₹30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிறுவர் பூங்கா, உடற்பயிற்சி கூடம் இதுவரை திறக்கவில்லை. சரிவர அமைக்காததால் கட்டிடத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. பூங்காவில் புல் தரையும் சரிவர அமைக்கவில்லை. தற்போது கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது. பூங்கா, உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தாலும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலைமை உள்ளது. அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகள் கொசுக்கடியில் அவதிப்பட்டு வருகின்றனர். டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ரூ 30 லட்சம் வரிப்பணம் வீணாகி இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென  கூறினர்.

Tags : park park ,gym ,village ,
× RELATED போதை ஊசி விற்ற ஜிம் மாஸ்டர் கைது