×

நோயாளிகளை கவனிக்காமல் செல்போனில் ‘கேம்’ விளையாடும் டாக்டர்கள் அரசு மருத்துவமனையில் அலட்சியம்

மதுரை, நவ.28: மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளை கண்டுகொள்ளாமல் டாக்டர்கள் கேம் விளையாடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் சிலர், பணி நேரத்தில் நோயாளிகளை அலட்சியப்படுத்துவது, அவர்கள் சொல்வதை காதுகொடுத்து கேட்க மறுப்பது, அலைக்கழிப்பது, மரியாதை குறைவாக பேசுவது மற்றும் செல்போன்களில் கேம் விளையாடுவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பலமுறை மருத்துவமனை நிர்வாகத்திற்கு புகார்கள் வந்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன் அண்ணா பஸ் நிலைய விரிவாக்க மருத்துவமனையில் விபத்தில் சிக்கிய நோயாளிகளை கவனிக்காமல் பயிற்சி டாக்டர்கள் இருவர் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த நோயாளிகளின் உறவினர்கள் டீனுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, விபத்து சிகிச்சை பிரிவு துைறத் தலைவர் டாக்டர் புகழேந்தி தலைமையில் அனைத்து டாக்டர்கள் கலந்துகொண்ட கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டு டீன் மருதுபாண்டியன் அனைவருக்கும் அறிவுரைகள் வழங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் காய்ச்சல், பாய்சன் குடித்தவர்கள் என நோயாளிகளின் கூட்டம் அலைமோதியது. ஆஸ்பத்திரியே அல்லோகலப் பட்டுக் கொண்டிருந்தது. அப்போது அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த பயிற்சி டாக்டர்கள் இருவர் செல்போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்தனர்.
இதுகுறித்து சிகிச்சைக்கு வந்த ஒருவர் டீன் மருதுபாண்டியன் கவனத்திற்கு கொண்டு சென்றார். இப்படி தொடர்ந்து செல்போன் கேம் விளையாட்டில் டாக்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடும் நடவடிக்கை டீன் எச்சரிக்கை இது குறித்து டீன் மருதுபாண்டியனிடம் கேட்ட போது, ``இது போன்ற செயல்பாடுகள் மனிதாபிமானமற்றது. முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக அனைவருக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்படும். அதன் பின்னரும் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடும் மருத்துவர்கள் மீது துறைரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பணி நேரத்தில் அலட்சியமாக இருத்தல், செல்போன்களில் விளையாடுதல், நோயாளிகளை அலைக்கழித்தல், அநாகரீகமாக பேசுதல் போன்ற செயல்களில் ஈடுபடும் டாக்டர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் குறித்து, நோயாளிகளோ அவர்களது உறவினர்களோ உடனடியாக என் கவனத்திற்கோ, மருத்துவமனை நிர்வாகத்தின் கவனத்திற்கோ கொண்டுவரவேண்டும். மேலும், மருத்துவமனை முழுவதும் தேவையான பகுதிகளை ரகசியமாக கண்காணிக்க பேராசிரியர்கள் கொண்ட குழுவும் அமைக்கப்படும்’’ என்றார்

Tags : doctors ,government hospital ,
× RELATED புனேவில் கார் விபத்தை ஏற்படுத்திய...