×

ஆத்தூர் நேருநகர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க பெண்கள் கடும் எதிர்ப்பு

ஆத்தூர், நவ.27: சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி 8வது வார்டு நேரு நகரில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள தனியார் அரிசி ஆலை அருகில் டாஸ்மாக் மதுபானக்கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இதற்கு அங்குள்ள பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டாச்சியர் செல்வன் போராட்டம் நடத்தியவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பெண்கள் கூறுகையில், நாங்கள் அன்றாடம் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வருகிறோம். எங்கள் பகுதியில் மதுபான கடை அமைந்தால் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பது கேள்விகுறியாகிவிடும். மதுபான கடை அமைய உள்ள இடத்தின் அருகே ரேஷன் கடை, அங்கன்வாடி மையம், பெண்கள் கழிப்பிடம் ஆகியவை உள்ளது. இதனால் பெண்கள் அந்த பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே அரசு மதுபானக்கடையை நேரு நகர் பகுதியில் அமைக்கக்கூடாது, என்றனர். கோட்டாச்சியர் செல்வனும், கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் கூறினார். இதனையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.

Tags : Women ,protest ,Tashmak ,area ,Attur Nerunagar ,store ,
× RELATED பெண் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை சிஆர்பிஎப் டிஐஜி டிஸ்மிஸ்