×

பர்கூர் அருகே பயிர் காப்பீடு திட்டம் குறித்த பயிற்சி முகாம்

கிருஷ்ணகிரி, நவ.27: பர்கூர் அருகே பயிர் காப்பீடு திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பர்கூர் வட்டாரத்தில், அட்மா திட்டத்தின் கீழ், திம்மிநாயக்கன்பட்டி பகுதி விவசாயிகளுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியை துணை வேளாண்மை அலுவலர் வேடியப்பன் தொடங்கி வைத்து, பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் குறித்து விளக்கம் அளித்தார். இதில் திட்ட பயிர் மதிப்பீட்டு அலுவலர் சந்துரு பங்கேற்று, நெல் சம்பா பயிர் ஒரு ஏக்கருக்கு ₹434 மட்டும் செலுத்தினால் ₹28,900 இழப்பீடு பெற முடியும் என்பதை எடுத்து கூறினார். பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் கவிதா, உழவன் செயலி பதிவிறக்கம் செய்து, அதை பயன்படுத்தும் முறை குறித்து விளக்கம் அளித்தார். உதவி வேளாண்மை அலுவலர் மாரிமுத்து, பயிர் காப்பீடு திட்டம் மற்றும் சொட்டுநீர் பாசனத்தின் நன்மைகள் குறித்து விளக்கினார். உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பார்வதி மற்றும் பழனிசாமி ஆகியோர் வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர். பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டம் குறித்து துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது.

Tags : Bargar ,
× RELATED பர்கூர் அருகே ஆந்திர எல்லையில் இருளர் இன மக்களின் வனதேவதை திருவிழா