×

தூசி பாலிடெக்னிக்கில் வாஸ்து, உளவியல் குறித்து விநாடி வினா நிகழ்ச்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள தூசி பாலிடெக்னிக்னிக் கல்லூரியில் வாஸ்து, உளவியல் தொடர்பான கேள்விகளுக்கு விடைகாணும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாலிடெக்னிக் நிறுவனர் டாக்டர் கே.ஆர். ஆறுமுகம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சசிக்குமார் முன்னிலை வகித்தார். தொடர்ச்சியாக 10 மணி நேரம் 1000 நபர்களின் வாஸ்து, உளவியல் மற்றும் ஆன்மிகம், குடும்ப பிரச்சினை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட  நேரடியான கேள்விகளுக்கு டாக்டர் ஆண்டாள் சொக்கலிங்கம் பதில் அளித்தார்.

காஞ்சிபுரம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளான வேலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி, திருச்சி, சென்னை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். காலை 8 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி மாலை 6 மணிவரை தொடர்ந்து 10 மணி நேரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

Tags : Vasu ,
× RELATED 6 கண்களும் ஒரே பார்வை: விமர்சனம்