×

மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் விதை தயாரிப்பு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மறியல்

அரியலூர்,நவ,23: அரியலூர் மாவட்டம், சன்னாவூர் கிராமத்தில் விவசாயிகள் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்கத்தால் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டதால் இந்த ஆண்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் முழுக்க மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் பாதிப்பால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பாதிப்படைந்துள்ளது. இந்த படைப்புழு தாக்குதலுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டதே தவிர எந்தவிதத்திலும் பூச்சிகளின் தாக்கம் குறையவே இல்லை.

படைப்புழு தாக்குதலுக்கான காரணம் என்னவென்று விரிவான விசாரணை வேண்டும். இதில் பழைய மக்காச்சோள விதைகளை விதைத்தவர்களுக்கு பாதிப்பு என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். இதில் மக்காச்சோள பயர்களை அளிக்க ஏதோ சதிவேளைகள் நடைபெறுவதாகவும் உடனே மாவட்ட நிர்வாகம் அதனை கண்டறிய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்மந்தப்பட்ட விதை தயாரிப்பு நிறுவனங்கள் மீது உரிய விசாரணை மற்றும் மேல் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

சாலை மறியலை கைவிட கோரி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவாதம் அளித்ததன் பேரில் சாலை மறியல் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இப்பேச்சுவார்த்தையில் வருவாய் ஆய்வாளர் திருப்பதி முன்னிலையில் சன்னாவூர் கிராம விவசாயிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் வேளாண் உதவி இயக்குனர் கண்ணன், வெங்கனூர் காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : attackers ,seed companies ,
× RELATED மகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்ைக...