×

பெரியகுளம் பஸ்ஸ்டாண்ட்டில் டூவீலர் ஸ்டாண்டை திறக்க அனுமதி கேட்டு வழக்கு

பெரியகுளம், நவ.23: பெரியகுளம் புது பஸ்ஸ்டாண்டில் மூடப்பட்ட நகராட்சி டூவீலர் ஸ்டாண்டை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் திறக்க அனுமதி கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையை நகராட்சி அணுகியுள்ளது. பெரியகுளம் , வடுகபட்டி, தாமரைக்குளம் மற்றும் 20 உட்கடை கிராமங்களிலிருந்து நூற்றுக்கும் அதிகமானோர் வெளியூர் பகுதிகளில் அரசு, தனியார் துறையில் பணி புரிகின்றனர். இவர்கள் மட்டுமின்றி வேறு பணிக்கு செல்வோரும் பெரியகுளம் புது பஸ்ஸ்டாண்டில் டூவீலர்களை நிறுத்தி விட்டு பஸ்களில் பயணிப்பர். தினமும் 200க்கும் அதிகமான டூவீலர்கள் மற்றும் அதிக எண்ணிக்கையில் சைக்கிள்கள் நிறுத்தப்படும். முகூர்த்த நாட்களில் வாகனங்களின் எண்ணிக்கை இருமடங்கு அதிகரிக்கும்.

அந்த ஸ்டாண்டை நகராட்சி ஆண்டிற்கு ரு 2.10 லட்சத்திற்கு குத்தகைக்கு விட்டது. இதை எடுத்தவருக்கு வருவாய் கிடைக்காததால் இரண்டாம் ஆண்டு குத்தகை நீட்டிப்பை நகராட்சிக்கு பணம் கட்டி தொடர முடியவில்லை. இதனால் நான்கு மாதங்களுக்கு மன் நகராட்சி ஸ்டாண்டிற்கு சீல் வைத்து முடியது. இதனை எதிர்த்து குத்தகைதாரர் தனக்கு ஸ்டாண்ட் எடுத்ததால் நஷ்டம் ஏற்பட்டதாகவும், மீண்டும் தனக்கே குறைந்த குத்தகைக்கு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தினமும் பஸ்ஸ்டாண்ட் வருவோர் டூவீலரை எங்கு நிறுத்துவது என சிரமப்படுகின்றனர். குத்தகைக்கு எடுக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிலர் டூவீலர்களை தங்களுக்கு தெரிந்த கடைகளுக்கு முன் நிறுத்துகின்றனர். இதன் காரணமாக அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பலரும் பாதிக்கின்றனர். இதனால் மீண்டும் ஸ்டாண்ட் திறக்க அனுமதிக்க வேண்டும் என நகராட்சி தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது.

Tags : toweler stadium ,pool ,
× RELATED தை அமாவாசையை முன்னிட்டு கமலாலய குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்