×

மாசாணியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.30.31லட்சம்

பொள்ளாச்சி,நவ.23:பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் பக்தர்களின் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது, இதில்  ரூ.30.31லட்சம் இருந்தது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். இங்கு, வெள்ளி, செவ்வாய் மற்றும் அமாவாசை தினங்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. அந்நேரங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவு இருக்கும்.  மாசாணியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை குறிப்பிட்ட மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இந்த மாதத்திற்கான உண்டியல் எண்ணும் பணி, இந்து அறநிலையத்துறை பேரூர் உதவி ஆணையர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாசாணியம்மன் கோயில் உதவி ஆணையர் ஆனந்த், ஆய்வாளர் மல்லிகா, கண்காணிப்பாளர் தமிழ்வாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பக்தர்கள், தன்னார்வலர்கள் பலர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

 கோயில் வளாகத்தில் இருந்த மொத்தம் 22 பொது உண்டியல் மற்றும் 9 தட்டுக்காணிக்கை உண்டியல்களில் உள்ள காணிக்கைகள் எண்ணப்பட்டது. இதில் பொது உண்டியல் மூலம் ரூ.23 லட்சத்து 18 ஆயிரத்து 584ம், தட்டு காணிக்கை உண்டியலில் ரூ.7லட்சத்து 13ஆயிரத்து 180 என மொத்தம் ரூ.30லட்சத்து 31ஆயிரத்து 764இருந்தது. மேலும் தங்கம் 143கிராம், வெள்ளி 355 கிராம் இருந்துள்ளது என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags : Masanniyamman ,
× RELATED அமாவாசையை முன்னிட்டு மாசாணியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு