×

கோவை வர்த்தக மையத்தில் ரூ.4.67 கோடிக்கு தேயிலை விற்பனை

கோவை, நவ.23:கோவை வர்த்தக மையத்தில் இந்த வாரம் ரூ.4.67 கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனையாகியுள்ளது. இது கடந்த வாரத்தை விட ரூ.1.32 கோடி அதிகமாகும். கோவை தேயிலை வர்த்தக மையத்தில் புதன் தோறும் தேயிலைத்தூள் விற்பனை நடக்கிறது. அதன்படி நேற்று முன்தினம் மாலை நடந்த விற்பனைக்கு கோவை, நீலகிரியை சேர்ந்த வர்த்தகர்களின் தேயிலைத்தூள் உள்ளூர் ரகம் (டஸ்ட்) 3.25 லட்சம் கிலோ விற்பனைக்கு வந்தது. இதில்  3.04 லட்சம் கிலோ விற்பனையானது. சராசரி விற்பனை விலை கிலோ ரூ.113.16. விற்பனை மதிப்பு ரூ.3.45 கோடி.

ஏற்றுமதி ரகம்(லீப்) 1.32 லட்சம் கிலோ  விற்பனைக்கு வந்தது. இதில் 1.11 லட்சம் கிலோ விற்பனையானது. சராசரி விற்பனை விலை கிலோ ரூ.109.33. விற்பனை மதிப்பு ரூ.1.22 கோடி. கடந்த வார விற்பனையோடு  ஒப்பிடுகையில், உள்ளூர் ரகம் கிலோவுக்கு ரூ.2.86ம், . ஏற்றுமதி ரகம்  கிலோவிற்கு ரூ.2.42ம் அதிகரித்துள்ளது. மொத்தத்தில் உள்ளூர் மற்றும்  ஏற்றுமதி ரக தேயிலைத்தூள் ரூ.4.67 கோடிக்கு விற்றுள்ளது. இது கடந்த வாரத்தை  விட ரூ.1.32 கோடி அதிகமாகும். உள்நாடு மற்றும் வெளிநாட்டில் தேயிலை வர்த்தகம் அதிகரிப்பு காரணமாக விற்பனை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

Tags : Coimbatore Business Center ,
× RELATED கோவை வர்த்தக மையத்தில் ரூ.3.35 கோடிக்கு தேயிலை விற்பனை