×

கடையம் பள்ளியில் குழந்தைகள் தின விழா

கடையம், நவ. 23:  கடையம் ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மியூஸ் இங்கிலீஷ் லிட்ரரி கிளப் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி தாளாளர் ஐசக் பாக்கியசாமி, முதல்வர் செல்வகுமார் ஆகியோர் ஆங்கிலத்தின் தனிச்சிறப்புகள் குறித்து பேசினர். ஆங்கில ஆசிரியை மாரிச்செல்வி வரவேற்றார். மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆசிரியை லோசனா நன்றி கூறினார்.
முதலியார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியும், இந்திய எழுத்தறிவு திட்டமும் இணைந்து குழந்தைகள் தின விழாவை நடத்தின. தலைமை ஆசிரியை அமலா தலைமை வகித்தார். ஆசிரியை ஆஷா வரவேற்றார். இந்திய எழுத்தறிவு திட்ட பணியாளர்கள் பத்மா, அருள்ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் 300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு ஓவியம், கட்டுரை, பேச்சு, பாட்டுப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. உடற்கல்வி ஆசிரியர் ஜான் மில்லர் நன்றி கூறினார்.  பெற்றோர் பிரதிநிதி கட்டி அப்துல்காதர், ஓவிய ஆசிரியர் திரிபுர செல்வம் உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Tags : Children's Day Festival ,Seashore School ,
× RELATED அரியலூரில் குழந்தைகள் தின விழா நடைபயண...