×

பாபநாசம் கோயில் படித்துறையில் ஆபத்தான நிலையில் மருதமரம்

வி.கே.புரம், நவ. 23:  பாபநாசம் கோயில் படித்துறையில் ஆபத்தான நிலையில் கிடக்கும் மருதமரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். பிரசித்திப் பெற்ற பாபநாசம் கோயில் முன்பு பழமையான மருத மரத்தின் கிளை, கடந்த செப்.11ம் தேதி முறிந்து விழுந்து சுத்தமல்லியை சேர்ந்த சேகர் என்பவர் பலியானார். இருவர் காயமடைந்தனர். இதையடுத்து கடந்த 12ம் தேதி மருதமரம் வேரோடு அகற்றப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக மரம், அருகிலுள்ள மகளிர் சுயஉதவிக்குழு கடையின் மீது விழுந்தது. இதில் கடை சேதமடைந்தது. இந்நிலையில் வேரோடு அகற்றப்பட்ட மரத்தின் தூர்பகுதி, கடந்த 10 நாட்களாகியும் அதே இடத்தில் கிடக்கிறது. பலத்த காற்று அடித்தாலோ அல்லது மழை பெய்து தண்ணீர் அதிகளவு பெருக்கெடுத்து ஓடினாலோ மரம் கிடக்கும் பகுதியில் மண் அரிப்பு அல்லது கற்கள் நகர்ந்தால் படித்துறையில் விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் கிடக்கும் மருதமரத்தின் தூர்பகுதியை, உயிர் சேதம் ஏற்படும் முன்பு அகற்ற கோயில் நிர்வாகிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags :
× RELATED களக்காடு ஜோசப் கல்வியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு