×

மாதனூர் அருகே தொடர் மழையால் புளிய மரக்கிளை முறிந்து விழுந்ததில் 2 மின்கம்பங்கள் சேதம் போக்குவரத்து பாதிப்பு

ஆம்பூர், நவ. 23: ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே தொடர் மழை காரணமாக புளிய மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் 2 மின்கம்பங்கள் சேதமடைந்தது. ஆம்பூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் நேற்று முன்தினம் மதியம் முதல் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே சின்ன பள்ளிக்குப்பம் கிராமத்தில் வேலூரில் இருந்து ஒடுகத்தூர் செல்லும் சாலையில் இருந்த ஒரு புளிய மரத்தின் கிளை நேற்று மதியம் திடீரென முறிந்து, அருகிலிருந்த மின்கம்பி மீது விழுந்தது. இதில் அருகருகே இருந்த 2 மின்கம்பங்கள் உடைந்து அருகில் இருந்த குடியிருப்பு பகுதிக்குள் விழுந்தது. இந்த சம்பவம் நடந்த நேரத்தில் அப்பகுதியில் யாரும் இல்லாததால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

இதுகுறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். நீண்ட நேரமாகியும் அங்கு யாரும் வராததால் கிராம மக்கள் தங்கள் வீட்டிலிருந்து கத்தி, கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து வந்து சாலையில் இருந்த மரத்தின் கிளையை வெட்டி அப்புறப்படுத்தினர். இதன்காரணமாக வேலூரில் இருந்து செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் சென்றன. சுமார் 2 மணி நேரத்திற்குப் பின்பு போக்குவரத்தை பொதுமக்களே சரி செய்தனர்.

Tags : rains ,Madanur ,
× RELATED மதுரையில் கனமழை: வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு