×

அடையாளம் தெரியாததால் மூதாட்டியின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் போலீசார் அடையாளம் கண்டு ஒப்படைத்தனர் விவசாய கிணற்றில் விழுந்து உயிரிழந்தார்

பேரணாம்பட்டு, மே 17: விவசாய கிணற்றில் விழுந்து உயிரிழந்த மூதாட்டியின் உடல் அடையாளம் தெரியாததால் அவரது குடும்பத்தினர் வாங்க மறுத்துவிட்டனர். தகவலறிந்த வந்த போலீசார் அடையாளம் கண்டு ஒப்படைத்தனர்.
பேரணாம்பட்டு அருகே மேல்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட வரதம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் புண்ணியவதி(70). இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை விவசாய நிலத்திற்கு சென்ற புண்ணியவதி நீண்ட நேரம் ஆகியும் வீடுதிரும்பவில்லையாம். இதனால் ஆதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிவந்தனர். இதற்கிடையில் நேற்று காலை அவரது விவசாய கிணற்றில் புண்ணியவதி சடலமாக கிடப்பதாக கண்டு, இதுகுறித்து மேல்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதனடிப்படையில் அங்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் புண்ணியவதியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, சடலத்தை பார்த்த அவரது மகன்கள், உறவினர்கள் இது புண்ணியவதியின் உடல் இல்லை என கூறி சடலத்தை வாங்க மறுத்தனர். இதுகுறித்த தகவலறிந்த வந்த மேல்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் குப்பன், போலீசார் உயிரிழந்தவரின் அடயாளங்களை சேகரித்தனர். அதில், உயிரிழந்த புண்ணியவதியின் வலது கையில் மச்சம் இருப்பதை கண்டு அடையாளம் காணப்பட்டது. அதன் பின்னர் குடும்பத்தினர் சடலத்ைத பெற்று இறுதி சடங்குகள் நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post அடையாளம் தெரியாததால் மூதாட்டியின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் போலீசார் அடையாளம் கண்டு ஒப்படைத்தனர் விவசாய கிணற்றில் விழுந்து உயிரிழந்தார் appeared first on Dinakaran.

Tags : Peranampatu ,Varadhampalayam village ,Melpatti ,Dinakaran ,
× RELATED (வேலூர்) கொட்டகையில் இருந்த ஆட்டை...