×

டாஸ்மாக் கடை முற்றுகை

கொடுங்கையூர்: சென்னை மூலக்கடை சத்தியவாணி முத்து சாலையில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த 18ம் தேதி அந்த பகுதியில் உள்ள வாடகை கட்டிடத்தில் கடையை திறக்க ஏற்பாடுகள் நடந்தது. இதை அறிந்ததும் அப்பகுதி மக்கள், அந்த கட்டிடத்தை முற்றுகையிட்டு, அந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களிடம் சமரசம் பேசிய கொடுங்கையூர் போலீசார், கடையை திறக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில், நேற்று காலை மேற்கண்ட கட்டிடத்தில் டாஸ்மாக் கடையை திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன.

இதையடுத்து, பெண்கள் உள்பட 50க்கு மேற்பட்ட பொதுமக்கள், டாஸ்மாக் கடையின் முன் திரண்டனர். அங்கு கடையை திறக்க கூடாது என கொட்டும் மழையில் நின்றபடி கோஷமிட்டனர். தகவலறிந்து கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசம் பேசினர். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைதொடர்ந்து போலீசார், லாரியில் இருந்து இறங்கி கொண்டிருந்த மது பாட்டில்களை தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினர். இனி இங்கு இந்த கடை திறக்கப்படமாட்டாது என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து, சுமார் ஒரு மணிநேரத்துக்கு பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : Taskmill Shop Siege ,
× RELATED டாஸ்மாக் கடை முற்றுகை