×

சம்பா, தாளடி நெற்பயிரில் இலை சுருட்டுப்புழுக்கள் கட்டுப்படுத்தும் வழிமுறை விவசாயிகளுக்கு ஆலோசனை

திருவிடைமருதூர், நவ. 22: ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கை: டெல்டா மாவட்டங்களின் பல பகுதிகளில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் வயல்களில் இலை சுருட்டுப்புழுக்கள் தாக்கி வருகின்றன. ஆரம்ப நிலையில் வயலின் ஒரு சில இடங்களில் காணப்பட்ட பாதிப்பானது  6 நாட்களில் வயல் முழுவதும் பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும்.  இதை தடுக்க மாலை நேரங்களில் விளக்குப்பொறி வைத்து அந்துப்பூச்சிகளை கவர்ந்து அளிக்க வேண்டும். தேவைக்கு அதிகமாக தழைச்சத்து உரங்கள் இடுவதை தவிர்க்க வேண்டும். வரப்புகளை சீராக்கி அதை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மேலும் புழுக்களை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 500 மில்லி குளோர்பைரிபாஸ் அல்லது 400 மில்லி இவற்றில் ஏதாவது ஒரு மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் வயலின் அனைத்து பகுதிகள் மற்றும் வரப்பு வாய்க்கால்களில் முழுவதும் நனையுமாறு தெளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Samba ,Thaladi Paddy ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையால்...