×

மழைக்காக விசுவக்குடி அணையில் கூட்டு பிரார்த்தனை கிறிஸ்தவர்கள், இந்துக்கள் பங்கேற்பு

பெரம்பலூர்,நவ.22: மழைக்காக விசுவக்குடி அணையில் கூட்டு பிரார்த்தனை நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள், இந்துக்கள் பங்கேற்றனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ளது அன்னமங்கலம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் அரசலூர், விசுவக்குடி, ஈச்சங்காடு, முகமதுபட்டிணம், பிள்ளையார்பாளையம் ஆகிய கிளை கிராமங்கள் உள்ளன. இப்பகுதி கிராமங்களின் விவசாயத்திற்காகத்தான் விசுவக்குடி அருகே பச்சைமலை, செம்மலை ஆகிய இரு மலைக்குன்றுகளை இணைத்து ரூ33.07 கோடியில் அணை கட்டப்பட்டது. கடந்த 2015ம் ஆண்டு பெய்த வடகிழக்கு பருவ மழையின்போது நிரம்பிய அணை நீர்பாசனத்திற்கு பயன்படுத்தாமலேயே வற்றிப்போனது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையாக பெய்த மழைநீரும் சிறிதளவு திறந்து விட்டும் பாசனத்திற்கு பயனில்லை.

தொடர்ந்து ஐந்தாறு வருடங்களாக விவசாயத்திற்கு போதுமான நல்லமழை பெய்யாததால் அன்னமங்கலம் கிராமமக்கள் மழைக்காக ஏங்கி வருகின்றனர்.
இதில் நடப்பாண்டும் எதிர்பார்த்தபடி போதுமான மழைபெய்யாமல் வானம் பொய்த்து வருகிறது. இதனால் ஊரிலுள்ள அனைத்து தரப்பு மக்களும் ஒன்றுகூடி திட்டமிட்டு மாதா சப்பரத்தை ஊர்வலமாக இழுத்து சென்று வறண்டு கிடக்கும் விசுவக்குடி அணைக்கட்டில் மழைக்காக கூட்டுப்பிரார்த்தனை நடத்த முடிவு செய்தனர். இதன்படி ஊரிலுள்ள மிகப்பழமையான கத்தோலிக்க தேவாலயமான புனித தோமையார் ஆலயத்திலிருந்து சப்பரத்தை ஏற்பாடு செய்து, அதில் லூர்துமாதா சொரூபத்தை வைத்து, அலங்கரித்து ஊர்வலமாக சுற்றி வந்தனர்.


Tags : Hindus ,Vishukkudi ,dam ,
× RELATED குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ்...