×

அழகப்பா பல்கலை கழக தொலைநிலை கல்வி வகுப்புகள் துவக்கம்

காரைக்குடி, நவ.22:  காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலை நிலைக்கல்வி இயக்ககத்தின் வாயிலாக நடத்தப்படும் பாடங்களுக்கான வகுப்புகள் நடத்தப்பட உள்ளது என அதன் இயக்குநர் ராசாராம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அழகப்பா பல்கலைக்கழக தொலை நிலைக்கல்வி இயக்ககத்தின் வாயிலாக நடத்தப்படும் எம்பிஏ மாணவர்களுக்கான தொடர் வகுப்புகள் தொலை நிலைக்கல்வி இயக்ககத்தில் டிச.3ம் தேதி முதல் 7ம் தேதி வரையும், 10 முதல் 14 வரை நடக்கவுள்ளது. பி.எல்ஐபி.ஐஎஸ்சி மற்றும் எம்.எல்ஐபி.ஐஎஸ்சி வகுப்புகள் 26ம் தேதி முதல் டிசம்பர் 23 வரை நடக்கவுள்ளது.

எம்.ஏ 26ம் தேதி முதல் 30 வரையும், டிசம்பர் 3 முதல் 5 வரை நடக்கவுள்ளது. எம்.ஏ கல்வியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் 26ம் தேதி முதல் 30 வரையும், டிசம்பர் 3 முதல் நடத்தப்பட உள்ளது. எம்.எஸ்சி வேதியியல் வகுப்புகள் 24 முதல் 29 வரையும், டிச. 5 முதல் 16ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. பிபிஏ, பிபிஏ (பேங்கிங்) எம்.ஏ (பிஎம் அண்டு ஐஆர்) பிஜீடிபிஎம், பிஜீடிஎச்ஏ வகுப்புகள் 27ம் தேதி முதல் டிச.2ம் தேதி வரை நடக்கவுள்ளது என தெரிவித்துள்ளார்.

Tags : Faculty ,
× RELATED சோகத்தில் மூழ்கிய மேல்மருவத்தூர்:...