×

ஏர்மென் தேர்வு விழிப்புணர்வு முகாம்

திண்டுக்கல், நவ.22:  ஒட்டன்சத்திரத்தில் வரும் 24ம் தேதி ஏர்மென் தேர்வு குறித்த விழிப்புணர்வு முகாம் நடக்க உள்ளது. ஒட்டன்சத்திரத்தில் இந்திய விமானப்படையில் ஏர்மென் தேர்வு குறித்த விழிப்புணர்வு முகாம் நடக்க உள்ளது. ஒட்டன்சத்திரத்தில் பழநி சாலையில் உள்ள கஸ்தூரி ரெட்டியார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரும் 24ம் தேதி காலை 10 மணிக்கு முகாம் துவங்குகிறது.இதில் ஏர்மென் தேர்வு மையத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளால் இப்பணிக்கான எழுத்து தேர்வு, பணி நியமனம், ஊதிய விபரம், சலுகைகள் உள்ளிட்ட பல விபரங்கள் தெரிவிக்கப்படும்.17 முதல் 20 வயதிற்குள்ளான 12ம் வகுப்பு அறிவியல் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

Tags : Airmen Selection Awareness Camp ,
× RELATED பழநி-திருப்பதிக்கு வந்தே பாரத் ரயில்...