×

சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

சேத்தியாத்தோப்பு, நவ. 22: சேத்தியாத்தோப்பு வெள்ளாற்று புதிய பாலத்தின் அருகில் கிழக்குபகுதியில் ஏராளமான கருவேல மரங்கள் வளர்ந்து ஆற்றின் இரு கரைகளையும்ஆக்கிரமித்துள்ளன. இக்கருவேல மரங்கள் நீண்டகாலமாக இருப்பதால் ஆற்றின்நீர்மட்டத்தை பாதிக்கிறது. மேலும் மழை, வெள்ளக் காலங்களில் வேகமாக செல்லும் மழை நீரை தடுத்து கிராமப்பகுதி, குடியிருப்புகள், சேத்தியாத்தோப்பு நகரத்துக்கு திருப்பிவிட்டு பெரிய சேதங்களை ஏற்படுத்துகிறது. இந்த கருவேல மரங்களை அகற்றி ஆற்றினை மீட்டெடுக்க வேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தொடர் கோரிக்கை வைத்து வருகிறார்கள். எனவே ஆறு மற்றும் கரைகளை ஆக்கிரமித்து நீண்டகாலமாகவளர்ந்திருக்கும் இந்த கருவேல மரங்களை அகற்றி , ஆற்றின் கரைகளைபலப்படுத்தி மண்ணுக்கு தீங்கில்லாத மரங்களை ஆற்றின் கரைகளில் வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் கரைகள் பலப்படுவதோ டு, ஆற்றின்நீரோட்டத்திற்கு தடையில்லாமலும் இருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Sethiyatopu Velladu ,
× RELATED விருத்தாசலம் அருகே பரபரப்பு ரயிலில்...