×

சிவிஎம் அண்ணாமலை பிறந்தநாள் விழா 1000 பேருக்குஅன்னதானம்

காஞ்சிபுரம், நவ. 21: அண்ணாவின் நண்பரான சிவிஎம்.அண்ணாமலை, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக பணியாற்றியவர். 1986ம் ஆண்டு நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பேரறிஞர் அண்ணா விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டவர். அவரின் பிறந்ந நாள் விழா நேற்று காஞ்சிபுரம் பூக்கடைச் சத்திரம் பகுதியில் நடைபெற்றது. திமுக மாநில மாணவரணி செயலாளரும், காஞ்சிபுரம் எம்எல்ஏவுமான வக்கீல் எழிலரசன் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், உத்திரமேரூர் எம்எல்ஏவுமான க.சுந்தர், சிவிஎம் அண்ணாமலை படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் நகர செயலாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், மாநில நெசவாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், அவைத்தலைவர் சந்துரு, துணை செயலாளர்கள் கருணாநிதி, ஜெகநாதன், பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதிகள் மாமல்லன், சிகாமணி, ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், குமணன், சாலவாக்கம் குமார், மாணவரணி அபுசாலி, டாக்டர் சோபன்குமார், ராம்பிரசாத், இளைஞரணி யுவராஜ், ரவிக்குமார், முத்துச்செல்வம், பாலன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சேரன், பரந்தூர் சங்கர், பத்மநாபன், நாதன், அன்பு உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
சிவிஎம் அண்ணாமலை பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் தொன்மை நகர அரிமா சங்கம், வரலாற்று நகர அரிமா சங்கங்களின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு மாவட்ட ஆளுநர் நந்தகோபால் தலைமை தாங்கினார். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் குழுவினர் சுமார் 100க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து ரத்ததானம் பெற்றனர்.
மேலும், காஞ்சிபுரத்தில் மேட்டுத்தெரு, செட்டித்தெரு, பூக்கடைச்சத்திரம், காவலான் கேட், பிள்ளையார்பாளையம், கீரைமண்டபம் உள்ளிட்ட 10 இடங்களில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : CVM Annamalai Anniversary Celebration ,
× RELATED கல்வி கட்டணத்தை முறைகேடு செய்ததாக...