×

கனகதாசா, ரிச்மான் பள்ளியில் குழந்தைகள் தினவிழா

கிருஷ்ணகிரி, நவ.21:  கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் கனகதாசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் இளம்பூரணம், வசந்திஇளம்பூரணம் ஆகியோர் தலைமைவ வகித்தனர். நிகழ்ச்சியின் நேருவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரின் பொன்மொழிகள் குறித்து ஆசிரியர்கள் பேசினர். விழாவினையொட்டி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் மாறுவேடப் போட்டி, பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் அருள் மற்றும் இருபால் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

காவேரிப்பட்டணம்:  காவேரிப்பட்டணம் ரிச்மான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தாளாளர் மாதேசன் தலைமை வகித்தார். விழாவில் பள்ளி குழந்தைகள் பங்கேற்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். விழாவின் போது அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. 

Tags : Children's Day Celebration ,Kanakadasa ,Richmond School ,
× RELATED கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளியில் சர்வதேச குழந்தைகள் தின கொண்டாட்டம்