×

ஊத்தங்கரை ஒன்றியத்தில் 3,627 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

ஊத்தங்கரை, நவ.21:  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் புதூர் புங்கனை ஊராட்சி, தாமிலோப்பட்டி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 6.87 கோடி மதிப்பில் உயர்மட்டபாலம் அமைக்கும் பணிகளை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, ஊத்தங்கரை எம்எல்ஏ மனோரஞ்சிதம் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, காரப்பட்டு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு அமைச்சர் சைக்கிள்களை வழங்கினார். மேலும், கீழ்குப்பம்,  அத்திப்பாடி, தள்ளப்பாடி, மகனூர்பட்டி, கல்லாவி, சிங்காரப்பேட்டை, பாவக்கல், மிட்டப்பள்ளி, சாமல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மொத்தம் 3,627 மிதிவண்டிகள் ₹1 கோடியே 34 லட்சத்து 90 ஆயிரத்து 763 மதிப்பிலான சைக்கிள்களை அவர் வழங்கினார். முன்னதாக உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளிடையே நடத்தப்பட்ட கட்டுரை போட்டி,  ஒவியப்போட்டி, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் பரிசுகளை வழங்கினார்.

 நிகழச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகேஷ்வர், மாவட்ட கல்வி அலுவலர் நடராஜன், முன்னாள் பால்வள ஒன்றிய தலைவர் தென்னரசு, முன்னாள் மாநில நிலவள வங்கி தலைவர் சாகுல்அமீது, கூட்டுறவு சங்க தலைவர் நாகராஜ், கூட்டுறவு சங்க தலைவர் தேவேந்திரன், வித்யா மந்திர் பள்ளி தாளாளர் சந்திரசேகரன்,  முன்னாள் ஊராட்சி குழு உறுப்பினா சிவானந்தம், சந்திரப்பட்டி முன்னாள் தலைவர் நாகராஜ், மற்றும்  திருவேங்கன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேடி, சண்முகம், தாசில்தார் மாரிமுத்து, தலைமையாசிரியர் ஞானபண்டிதன், குமார் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : cycling ,Dum Dancers Union ,
× RELATED கோவை மாணவர்கள் 4 தங்கம், 4 வெண்கலம் வென்று அசத்தல்