×

புயல் நிவாரணம் கோரி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முற்றுகை

வத்தலக்குண்டு, நவ. 20: புயல் நிவாரணம் கோரி வத்தலக்குண்டு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வத்தலக்குண்டுவில் தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. மாநில செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். கூட்டத்தில் வத்தலக்குண்டு பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். தங்களது கோரிக்கையை ஏற்று வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டு, கரட்டுப்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஊர்களின் கண்மாய்களுக்கும், ஆற்றுக்கும் மஞ்சளாறு அணை தண்ணீரை திறந்து விட்ட முதல்வர், பொதுப்பணித்துறையினருக்கு நன்றி தெரிவித்தும், வருங்காலத்தில் மஞ்சளாறு தண்ணீரை சுழற்சி முறையில் வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். தங்கப்பாண்டி நன்றி கூறினார். தொடர்ந்து அனைவரும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு திரண்டு சென்று விரைவில் கஜா புயல் நிவாரணம் வழங்க வேண்டும் என முறையிட்டனர்.

Tags : Siege ,Revenue Inspectorate ,
× RELATED லட்சக்கணக்கில் விவசாயிகள் முற்றுகை...