×

கேவிபி, ரோட்டரி சார்பில் கரூரில் குறைந்த கட்டண டயாலிசிஸ் சென்டர் திறப்பு

கரூர், நவ.20: கரூர் வைஸ்யா வங்கி மற்றும் ரோட்டரி பவுண்டேசன் இணைந்து தமிழ்நாட்டில் கரூர், தேனி, திண்டுக்கல், திருச்சி ஆகிய இடங்களில்  குறைந்த கட்டண டயாலிசிஸ் சென்டர்களை அமைக்க திட்டமிப்பட்டுள்ளது. கரூர் தெற்கு நரசிம்மபுரத்தில் உள்ள அபிராமி மகப்பேறு மையத்தில் அமைந்துள்ள டயாலிசிஸ் சென்டரை   கரூர்  வைஸ்யா வங்கி இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி பி.ஆர். சேஷாத்ரி   துவக்கி வைத்து பேசுகையில். கரூர் வைஸ்யா வங்கி  மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த  உதவுவதின் மூலம் சமூக முன்னேற்றத்தை  ஏற்படுத்துவதில் உறுதியாக உள்ளது என்றார்.

துவக்க விழாவில் ரோட்ரி இன்டர்நேஷனல் இயக்குனர் பாஸ்கர் ,இணை இயக்குனர்  விஜயகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். ரோட்டரி3000 மாவட்ட ஆளுனர் கண்ணன் தலைமை வகித்தார். ரோட்டரி 3000 மாவட்ட முன்னாள் ஆளுனர் கோபால கிருஷ்ணன் வாழ்த்தி பேசினார்.
கரூர் வைஸ்யா வங்கி தனது நிறுவன சமுக பொறுப்பின் மூலம் இரண்டு குறைந்த கட்டண டயாலிசிஸ் சென்டர்களை அமைப்பதற்காக ரூ1 கோடியே 20 லட்சத்தை நன்கொடையாக வழங்கி உள்ளது. நிகழ்ச்சியில்ரோட்டரி அமைப்பின் கோபாலகிருஷ்ணன், ரோட்டரி மாவட்ட ஆளுனர் கண்ணன், ஊரக சுகாதார சேவை இணை இயக்குனர் விஜயகுமார் ஆகியோர் பேசினர்.

Tags : dialysis center ,Karur ,KVP ,Rotary ,
× RELATED கரூர் மாநகர பேருந்து நிலையத்தில்...