×

இந்து முன்னணி ரத யாத்திரை துவக்கம்

திருப்பூர், நவ.16: உலக நன்மை வேண்டி டிசம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் இந்து முன்னணி சார்பில் கஜ பூஜை, 108 அஸ்வ பூஜை, 1008 கோ பூஜை, மீனாட்சி திருக்கல்யாணம், ஆண்டாள் திருக்கல்யாணம் ஆகிய பூஜைகள் நடைபெற உள்ளது. அதன்பின், மகாலட்சுமி மகாயாகம் நடக்கிறது. இதற்காக 360 அடி நீளம், 60 அடி அகலம், 4 அடி உயரத்தில் பிரமாண்டமான யாக குண்டம் தயாராகிறது, இதில், 17 ஹோம குண்டங்கள் அமைய உள்ளது.

இதையொட்டி, திருப்பூர் புதிய பஸ் நிலையம் முன்பு விழிப்புணர்வு ரத யாத்திரை துவக்க விழா நேற்று நடந்தது. இதில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்த ரதம் மாவட்டம் முழுவதும் செல்கிறது.

Tags : Rath Yatra ,
× RELATED ரயிலில் கேட்பாரற்று கிடந்த 4 கிலோ கஞ்சா பறிமுதல்