×

சாய்  நிவாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா

திருத்துறைப்பூண்டி, நவ.15: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மேல கொருக்கை சாய்  நிவாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடைபெற்றது.
பள்ளி தாளாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார்.  பள்ளி முதல்வர் தனசேகரன் குழந்தைகள் தினவிழா பற்றி பேசினார். கரூர் வைஸ்யா வங்கி மேலாளர் வெங்கடேசன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார். வங்கி அலுவலர் ஆனந்தகிருஷ்ணன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆசிரியர் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags : Children's Day Celebration ,Nai Metric Higher Secondary School ,
× RELATED அரியலூரில் குழந்தைகள் தினவிழா கொண்டாட்டம்