அரியலூர்,நவ.14: இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த தினம் இன்று (14ம் தேதி), குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது,
குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு பள்ளிகளில் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, மாறுவேட போட்டி நடத்தி வெற்றிபெரும் மாணவர்களுக்கு பரிசு வழங்கி, மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது வழக்கம்.அந்த வகையில், அரியலூரில் குழந்தைகள் தினம் கொண்டாடத்தை முன்னிட்டு கல்லூரி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் குழந்தைகள் நேற்று நேரு போன்று வெள்ளை நிறத்தில் உடையணிந்து, தலையில் தொப்பி, அவருக்கு பிடித்தமான ரோஜா பூவினை சட்டையில் வைத்து, கையில் தேசியக்கொடியினை ஏந்தி பள்ளிக்கு வந்திருந்து, குழந்தைகள் தின விழாவை கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் பத்மபிரியா உள்ளிட்ட ஆசியர்கள் கலந்து கொண்டனர்.