×

அழகப்பா பல்கலை வகுப்புகள் துவக்கம்

காரைக்குடி, நவ.15: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி தொடர் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன என இயக்குநர் ராசாராம் தெரிவித்துள்ளார்.காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்குநர் ராசாராம் கூறியதாவது: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் வாயிலாக நடத்தப்படும் பி.எஸ்சி (சிஎஸ்) வகுப்புகள் 15 முதல் 26 வரையும், டிசம்பர் 3, 4ம் தேதிகளிலும் நடக்கும். பிசிஏ வகுப்புகள் 15 முதல் 28 வரையும், பிஎஸ்சி (ஐடி) வகுப்புகள் 15 முதல் 26 வரையும், 29, 30 ஆகிய தேதிகளில் கம்ப்யூட்டர் துறையில் நடக்கிறது. எம்சிஏ, பிஜிடிசிஏ வகுப்புகள் 15 முதல் டிசம்பர் 2 வரை கம்ப்யூட்டர் துறையில் நடக்கிறது. எம்.எஸ்சி (இயற்பியல்) வகுப்புகள் 19 முதல் டிசம்பர் 4ம் தேதி வரை நடக்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Faculty ,Universities ,
× RELATED அர்ஜெண்டினாவில்...