×

எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்

ஊத்துக்கோட்டை, நவ.15:  பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் கூட்டுசாலையில் திருவள்ளூர் வடக்கு மாவட்டம்  பூந்தமல்லி (தனி) தொகுதி எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயற்குழு மற்றும் பாக முகவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் அவைத்தலைவர் ஜி.பாஸ்கர் தலைமை தாங்கினார். எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆ.சத்தியவேலு வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் பகலவன், துணைச்செயலாளர் கதிரவன், பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் தேவேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, தங்கம் முரளி, முனிவேல், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கோடுவெளி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு, நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களான தொமுச பேரவை செயலாளர் சண்முகம், சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், முன்னாள் எம்பி ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், பூந்தமல்லி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்வது, ஆளும் அதிமுக அரசின் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் சட்டம் ஒழுங்கை கண்டிப்பது, உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றிய நிர்வாகிகள் டி.பாஸ்கர், சீனிவாசன், முனுசாமி, சம்பத், டேவிட், ரஞ்சித் உட்பட பலர் கலந்து
கொண்டனர்.

Tags : meeting ,DMK Executive Committee ,Allapuram ,Southern Union ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...