×

‘எம்டிசி’யில் முறைகேடாக நடத்துனர் பணி: நடவடிக்கை கோரி விஜிலென்ஸ் கடிதம்

சென்னை: ‘எம்டிசி’யில் பணம் கொடுத்து முறைகேடாக நடத்துனர் பணி பெற்றவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, விஜிலென்ஸ் ேபாலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர். சென்னை பெரியபணிசேரியை சேர்ந்த அன்பழகன் என்பவர், கடந்த செப்டம்பரில் ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறைக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியிருந்தார். அந்த மனுவில், ‘சென்னை, ஐய்யப்பன்தாங்கல் பணிமனையில் நடத்துனராக ராஜ்குமார் என்பவர் பணியாற்றி வந்தார். பணிக்கு சேர்ந்து, 5 ஆண்டுகள் ஆனநிலையில், லஞ்சம் கொடுத்து முறைகேடாக கட்டுப்பாட்டாளர் பதவியை பெற்றுள்ளார். இவர் நடத்துனர் உரிமத்தையே முறைகேடகா பெற்று இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, அவரது உரிமத்தை ஆய்வு செய்து, உண்மை தன்மை கண்டறிவேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய விஜிலென்ஸ் இயக்குனரகம், எம்டிசியின் இயக்குனர் அலுவலகத்திற்கு மனு ஒன்றை அனுப்பியிருக்கிறது. அதில், ‘நடத்துனர் ராஜ்குமாரின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும். அப்போது குற்றம் உறுதி செய்யப்படும் பட்சத்தில், அவர் மீது ஊழல் மற்றும் முறைகேடு தடுப்பு சட்டம் (1988)ன் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருக்கிறது. தற்போது இந்த விவகாரம் எம்டிசி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : MDC ,
× RELATED 10 பொதுத்துறை வங்கிகள்...