×

மெரினாவில் பெண்ணை கொன்று புதைத்த வழக்கு : கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்

சென்ைன: மெரினாவில் பெண்ணை நிர்வாண நிலையில் கொலை செய்த விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் மற்றும் அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர். பாலியல் தொழில் மோதலில் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட 2 பேரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.சென்னை மெரினா கடற்கரை நீச்சல் குளம் பின்புறம் உள்ள மணல் பரப்பில் கடந்த வாரம் பெண் ஒருவர் நிர்வாண நிலையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருந்தார். தகவலறிந்த அண்ணாசதுக்கம் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவ இடத்தில் கைப்பற்றிய செல்போனை வைத்து துப்புதுலக்க தொடங்கினார்.

முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் மதுரையை சேர்ந்த செல்வி (40) என தெரியவந்தது. இதையடுத்து, அந்த செல்போனில் கடைசியாக பேசிய அழைப்புகளை வைத்து போலீசார் விசாரித்தனர்.  அதில், சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரேம்குமாருடன் செல்வி பேசியது தெரியவந்தது. இதையடுத்து, ஆட்டோ டிரைவர் பிரேம்குமார் மற்றும் அவருடைய  நண்பரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:

மதுரையை சேர்ந்த செல்வி என்பவர் அடிக்கடி மெரினா கடற்கரை பகுதியில் பாலியல் தொழிலில் செய்ய வருவது வழக்கம். மதுரையில் இருந்து சென்னைக்கு வரும்போது எங்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதற்கிடையில் செல்வியுடன் வந்த வேறு ஒரு பெண்ணுடன் எங்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவளுடன் நெருங்கி பழகியபோது செல்வியால் தனது தொழில் பாதிக்கப்படுவதாக அந்த புதுப்பெண் கூறியதையடுத்து செல்வியோடு பேசுவதை நாங்கள் நிறுத்தினோம். கடந்த வாரம் இரவு மெரினா கடற்கரைக்கு வந்த செல்வி மற்றும் நாங்கள் அனைவரும் நீச்சல்குளம் அருகே மணல் பரப்பில் உட்கார்ந்து மது அருந்திய பிறகு உல்லாசமாக இருந்தோம். அப்போது, அவர் தன்னுடன் ஏன் பேசுவது இல்லை என்று கூறி தகராறு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் பீர்பாட்டிலால் தலையில் அடித்தபோது அவர் மயங்கி விழுந்தார். அதன்பிறகு வாயிலும் மூக்கிலும் மணலை அள்ளி வீசியதில் அவர் இறந்து விட்டார். இதையடுத்து, என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த போது வேறுவழியின்றி மணல் பரப்பில் குழிதோண்டி புதைத்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டோம். பதற்றத்தில் சிறியதாக குழி தோண்டி புதைத்ததால் மாட்டிக்கொண்டோம். செல்வியுடன் அடிக்கடி செல்போனில் பேசியதை வைத்து போலீசார் எங்களை கைது செய்தனர்.  இவ்வாறு அவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்தனர்.
இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : murder ,
× RELATED கொலையால் நடந்த முன்விரோதம்: மாஜி மாணவர் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு