×

முத்துப்பேட்டையில் சாலை இருபுறமும் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு

முத்துப்பேட்டை நவ.2:  முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து நீயூ பஜார், கொய்யா முக்கம், பங்களா வாசல், ஓடக்கரை, செக்கடிக்குளம் வரையிலான பட்டுக்கோட்டை சாலை இருபுறமும் தற்பொழுது ஆக்கிரமிப்புகள் பெருகிவிட்டதால் போக்குவரத்துக்கு மிகவும்
இடையூறாக உள்ளது.
இந்தநிலையில் நேற்று வேதாரண்யத்திலிருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் தனியார் பேருந்தும், அதேபோல் பட்டுக்கோட்டையிலிருந்து நாகப்பட்டிணம் சென்ற ஒரு அரசு பேரூந்தும் கொய்யா முக்கம் அருகே ஆக்கிரமிப்பால் குறுகிய சாலையாக  உள்ளது. இதனால் சாலை இருபுறமும் போக்குவரத்து தடைப்பட்டு நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றது. சுமார்  1மணிநேரத்திற்கு பிறகு சிக்கிக்கொண்ட பேரூந்துகள்   மீட்டு சரி செய்யப்பட்டும் கூட அணிவகுத்து நின்ற மற்ற வாகனங்கள் அப்பகுதியை கடக்க பல மணிநேரம் ஆகிவிட்டது. இதுபோல் தினமும் தொடர;ந்து இதுபோன்ற போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே  முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் முதல் செம்படவன்காடு வரையிலான பட்டுக்கோட்டை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி தரவும், அதேபோல் திருத்துறைப்பூண்டி சாலை மற்றும் மன்னார்குடி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றி போக்குவரத்து சீராக செல்லும் வகையில் சரி செய்து தரவேண்டும் என்று இப்பகுதியை சேர்ந்த மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,
× RELATED கோழிக்கோடு பீச் சாலையில் கார்...