×

குண்டும் குழியுமான தீட்டுக்கல் சாலை: பொதுமக்கள் அவதி

ஊட்டி, நவ. 2: ஊட்டியில் இருந்து தீட்டுக்கல் செ்ல்லும் சாலை மிகவும் பழுதடைந்து பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஊட்டியில் இருந்து படகு இல்லம், தீட்டுக்கல் வழியாக பார்சன்ஸவேலி, போர்த்திமந்து ஆகிய பகுதிகளுக்கு ஒரு சாலை செல்கிறது. தீட்டுக்கல் பகுதியில் உள்ள பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் மத்திய, மாநில ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு நாள் தோறும் ஏராளமானவர்கள் இவ்வழித்தடத்தில் பயணிக்கின்றனர். ேமலும், சுற்றுலா பயணிகள் பலரும் இப்பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், காட்டேஜ்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், ஊட்டியில் இருந்து தீட்டுக்கல் செல்லும் சாலையில்,

புதிய படகு இல்லம் செல்லும் சாலை முதல் தீட்டுக்கல் வரை பல இடங்களில் சாலை பழுதாகியுள்ளது. பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், இச்சாலையில் சிறிய வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் இரு சக்கர வாககனங்களில் செல்பவர்கள் இச்சாலையில் உள்ள பள்ளங்களில் தவறி விழுந்து விபத்து ஏற்படுகிறது. தற்போது மழை துவங்கியுள்ள நிலையில், மேலும் இச்சாலை பழுதடைய வாய்ப்புள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் இச்சாலையில் உள்ள பள்ளங்களை தற்காலிகமாக மூட வேண்டும். மழை ஓய்ந்த பின் சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Dusty Road ,
× RELATED 658 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள்...