×

மோசடி வழக்கில் கைது செய்யாமல் இருக்க லஞ்சம் வாங்கிய 2 எஸ்.ஐ.,க்கள் சஸ்பெண்ட்: போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் அதிரடி

சென்னை, நவ. 2: மோசடி வழக்கில் கைது செய்யாமல் இருக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மத்திய குற்றப்பிரிவை சேர்ந்த 2 எஸ்.ஐ.,க்களை போலீஸ் கமிஷனர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகர காவல் துறையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு மோசடி தடுப்பு பிரிவில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட நபரை ஜாமீனில் வெளியே விடவும், அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபரின் சகோதரரை கைது செய்யாமல் இருக்கவும் விசாரணை அதிகாரியான உதவி ஆய்வாளர் சந்தியா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சிவஞானம் ஆகியோர் ரூ.1 லட்சம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மோசடி நபர்களிடம் இருந்து இரண்டு உதவி ஆய்வாளர்களும் ரூ.50 ஆயிரம் லஞ்சமாக வாங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பணம் கொடுத்த நபர் ரகசியமாக வீடியோ ஆதாரத்துடன் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து புகாரின்படி, விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் கணேச மூர்த்திக்கு உத்தரவிட்டார். அதன்படி அவர் விசாரணை நடத்தினார். அப்போது வழக்கில் கைது செய்வதை கைவிடவும், குற்றவாளியை ஜாமீனில் வெளியே விடவும் சிறப்பு உதவி ஆய்வாளர் சிவஞானம் மூலம் உதவி ஆய்வாளர் சந்தியா ரூ.50 ஆயிரம் பணம் பெற்றது தெரியவந்தது. அதற்கான விசாரணை அறிக்கையும் கூடுதல் கமிஷனர் கணேசமூர்த்தி போலீஸ் கமிஷனரிடம் அளித்தார். அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் சந்தியா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சிவஞானம் ஆகிய இருவரையும் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தற்காலிக பணி நீக்கம் ெசய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags : Police Commissioner ,
× RELATED பள்ளி நிர்வாகத்தினரிடம் பணம் வாங்கி...