×

கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாள் இன்று அனுசரிப்பு

நாகர்கோவில், நவ.2: கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாள் இன்று (2ம் தேதி) வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கல்லறை தோட்டங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கின்றன.இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2ம் தேதியை கிறிஸ்தவர்கள் சகல ஆன்மாக்கள் தினமாக கடைபிடிக்கின்றனர். இதனை கல்லறை திருநாள் என்றும் அழைக்கின்றனர். கல்லறை திருநாள் அன்று கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டத்திற்கு சென்று தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கல்லறைகளை சுத்தப்படுத்தி தங்கள் முன்னோர்களின் கல்லறையை மலர்களாலும் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவியும் மலர் மாலைகளை அணிவித்தும் இறந்தவர்களின் ஆன்மாவுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்கின்றனர். கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபைகளில் பங்குதந்தையர்கள் கல்லறை தோட்டத்திற்கு சென்று கல்லறைகளை மந்திரித்து திருப்பலி நிறைவேற்றுகின்றனர். குமரி மாவட்டத்தில் அனைத்து கல்லறை தோட்டங்களிலும் இந்த நிகழ்வு இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்வுகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொள்கின்றனர்.

Tags : Christian ,
× RELATED அதானிக்கு எதிராக போராடியதால் கிறிஸ்தவ சபை வங்கி கணக்கு முடக்கம்