×

சேதுபாவாசத்திரம் அருகே டெண்டர் விட்டும் சீரமைக்கப்படாத கள்ளம்பட்டி- ஒத்தக்கடை சாலை

சேதுபாவாசத்திரம்,  நவ. 1: டெண்டர் விடப்பட்டும் சேதுபாவாசத்திரம் அருகே கள்ளம்பம்பட்டி-  ஒத்தக்கடை சாலை சீரமைக்கப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு  வருகின்றனர். சேதுபாவாசத்திரம் அருகே கள்ளம்பட்டியில் இருந்து  சொக்கநாதபுரம், ஒலிராமன்காடு, ஆயன்தாக்கு வழியாக ஒத்தக்கடையில்  பட்டுக்கோட்டை சாலையில் இணையும் 7.50 கி.மீ தூரமுள்ள இந்த சாலை பழுதடைந்து  பல்லாங்குழிபோல் காட்சியளித்தது. சுற்று வட்டார பொதுமக்களின் நீண்ட நாள்  கோரிக்கையை ஏற்று கடந்த 6 மாதங்களுக்கு முன் சாலை அமைக்பு டெண்டர்  விடப்பட்டது. கடந்த 3 மாதங்களுக்கு முன் ஒலிராமன்காடு அருகே தடுப்புச்சுவர்  மட்டும் கட்டப்பட்டது.

அதன்பிறகு பணிகள் நடக்கவில்லை. கள்ளம்பட்டி,  சொக்கநாதபும், பள்ளத்தூர் வழியாக அரசு பேருந்து மற்றும் தனியார் பள்ளி  பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இந்தசாலை வழியாக தான் சைக்கிளில் மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். சாலை  குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதுடன் வாகன  ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மழைக்காலம் துவங்கும் முன் சாலையை  சீரமைக்கும் பணியை விரைவில் முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்ைக  விடுத்துள்ளனர்.

Tags : road ,Sedupahadri ,
× RELATED கோழிக்கோடு பீச் சாலையில் கார்...