×

ஹைட்ரோகார்பன் திட்டத்தால் மோடி, எடப்பாடி அரசு டெல்டா மாவட்டங்களை நாசப்படுத்திவிடும் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

சீர்காழி,நவ.1: ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மோடி, எடப்பாடி அரசு டெல்டா மாவட்டங்களை நாசப்படுத்திவிடும் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார். நாகை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஹைட்ரோகார்பன் திட்டத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பரப்புரையின் ஒரு பகுதியாக பேசுகையில், தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களில் மூன்று இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இவற்றில் இரண்டு உரிமங்கள் வேதாந்தா குழுமத்துக்கும், ஒரு உரிமம் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டு உள்ளன. ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள உறிமத்தை கொண்டு நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் 731 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள 85 கிராமங்களில் மீத்தேன், ஈத்தேன், கச்சா எண்ணெய், பாறை எரிவாயு, இயற்கை எரிவாயு உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன்கள் எடுக்கப்படும்.

இந்த திட்டத்தை நிறுத்த வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறேன். இந்த திட்டம் நிறைவேற்றினால் டெல்டா மாவட்டங்களை சேர்ந்தவர்களை வெளியேற்றிவிடுவார்கள். சட்டமன்றத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற கூடாது என சட்டசபையில் சட்டம் நிறைவேற்ற வேண்டும். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஹைட்ரோகார்பன் திட்டத்தால் மோடி, எடப்பாடி அரசு டெல்டா மாவட்டங்களை நாசப்படுத்திவிடுவார்கள். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட வேண்டும். இந்த திட்டம் செயல்படுத்த தொடங்கினால் முதலில் வந்து நான்தான் போராட்டம் நடத்துவேன்
என்றார்.

Tags : DMRC ,districts ,Delhi ,Edappadi ,
× RELATED இரக்கம் காட்டாத வெயில்; தமிழ்நாட்டில்...