×

வருசநாடு அருகே நக்சலைட் நடமாட்டம்?

வருசநாடு, நவ.1: வருசநாடு அருகே மலைப்பகுதியில் நக்சலைட் நடமாட்டம் உள்ளதா என அதிரடிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம் வருசநாடு அருகே அரசரடி, வெள்ளிமலை, குடிக்காடு, பிளவக்கல் மலை உள்ளிட்ட பகுதிகளில் மர்மநபர்கள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து விருதுநகர், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அதிரடிப்படை போலீசார் மற்றும் கியூ பிரிவு போலீசார் அப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மர்நபர்கள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்க மலைவாழ் மக்களுக்கு காவல்துறையினர் ரகசிய போன் நம்பர் கொடுத்து வருகின்றனர். ஒத்தவீடு, ஒத்த தோட்டம் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ஒவ்வொரு ஆண்டும் இந்த பகுதியில் உள்ள மலைகளில் போலீசார் பயிற்சி மேற்கொள்வது வழக்கம். மர்மநபர்கள் நடமாட்டம் உள்ளதாக வந்த தகவலையடுத்து தேடுதல் வேட்டை துவக்கப்பட்டுள்ளது’ என்றனர். வருசநாடு அருகே பள்ளத்தூர் மலையடிவரத்தில் கடந்த 2007ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த யோகேஷ், மதன் மற்றும் தமிழகத்தை சேர்ந்த நொண்டி பழனி உட்பட 4 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Vandana Nadu ,
× RELATED தேனி அருகே வேன் கவிழ்ந்து சென்ட்ரிங் தொழிலாளி பலி: 2 பேர் படுகாயம்