×

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நாட்றம்பள்ளியில்

நாட்றம்பள்ளி, அக்.31: நாட்றம்பள்ளி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மற்றும் வட்டார வள மையம் சார்பில் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.தாசில்தார் குமார் தலைமை தாங்கினார். முகாமில் அறிவுதிறன் குறைபாடு, செவித்திறன், கண்பார்வை, உடல் இயக்கம் குறைபாடுகள் உள்ள குழந்தைகள் 210 பேரக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும், 61 பேருக்கு தேசிய அடையாள அட்டை, 3 பேருக்கு மூன்று சக்கர வாகனம், ஒருவருக்கு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

Tags : Special Medical Camp for Nanny ,
× RELATED ஊராட்சி செயலாளர், மனைவி மீது ரூ.20.43 லட்சம் சொத்து குவிப்பு வழக்கு