×

காரைக்கால் தடகள வீரர்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பு

காரைக்கால், அக்.30: காரைக்கால் மாவட்ட தடகள சங்கம் சார்பில், 14 மற்றும் 16 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு, மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டி காரைக்கால் அரசு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் முடிவில், வெற்றிபெற்ற வீரர்களுக்கு, காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேநிலைப்பள்ளி துணை முதல்வர் கோவிந்தராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். உடற்கல்வி விரிவுரையாளர் மனோகரன், புதுச்சேரி தடகள சங்கத்தின் செயலர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் 300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றிபெற்ற 13 வீரர்கள், வரும் டிசம்பர் மாதம் ஆந்திராவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளதாக,

மாவட்ட தடகள சங்கத்தின் செயலர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார். காரைக்கால், அக்.30: காரைக்கால்  சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோயில் மற்றும் சார்பு கோயில்களில், 50க்கும் மேற்பட்டோர் சிவாச்சாரியார், பட்டாச்சாரியார், குருக்கள் உள்ளிட்ட பல்வேறு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான ஒரு மாத கால ஊதியத்தை தீபாவளி போனஸாக கோயில் நிர்வாகம் வழங்கியது. போனஸ்சுடன், இலவச வேட்டி, சேலையும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், காரைக்கால் தெற்கு தொகுதி எம்எல்ஏ அசனா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஊழியர்களுக்கு போனஸ் தொகை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில், அறங்காவல் குழுத்தலைவர் கேசவன், பொருளாளர் ரஞ்சன், உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Karaikal ,athlete ,level competition ,
× RELATED ரூ.3.90 கோடி செலவில் காரைக்கால் மீன்பிடி...