×

அனாதையாக கிடந்த நாட்டுத்துப்பாக்கி

கொடைக்கானல், அக். 30: கொடைக்கானல் கீழ்மலை கிராமம் பாச்சலூரில் உள்ளது கவியக்காடு வனப்பகுதி. நேற்று மாலை இவ்வனப்பகுதியில் சத்திரப்பட்டி வனவர் முகமது தாஸ்தீன் ரோந்து சென்றார். அப்போது வனப்பகுதிக்குள் ஒரு நாட்டுத்துப்பாக்கி அனாதையாக கிடந்துள்ளது. தொடர்ந்து அதனை எடுத்து பார்த்த போது அதில் ஒரு தோட்டாவும் இருந்தது தெரிந்தது. பின்னர் மேலதிகாரிகள் அறிவுரைப்படி வனவர் அந்த துப்பாக்கியை தாண்டிக்குடி போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்த புகாரில் சப்இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். வனப்பகுதிக்குள் கிடந்த நாட்டுத்துப்பாக்கி வேட்டையாடுபவர்கள் பயன்படுத்தியதா அல்லது நக்சல்கள் யாராவது ஊடுரூவியுள்ளனரா என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED சாலை மறியல்