×

முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் குடிபோதையில் தகராறு: ஒருவர் கைது

முத்துப்பேட்டை, அக்.26: முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த தீயணைப்பு வீரர் விமல்ராஜிடம் மன்னார்குடி சாலையில் வசிக்கும்  சின்னப்பா (எ) சந்திரமோகன்(40) என்பவர் கடும் குடிபோதையில் தகராறு செய்ததுடன் அணைத்து தீயணைப்பு வீரர்களை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தீயணைப்பு வீரர் விமல்ராஜ் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்.இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட சின்னப்பா (எ) சந்திரமோகனை கைது செய்தனர்.

Tags : fire station ,
× RELATED துவரங்குறிச்சி தீயணைப்பு நிலையம் இடமாற்றம்