×

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது எப்படி? கலெக்டர் தலைமையில் ஆலோசனை

ஆண்டிபட்டி, அக்.26: வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி முதல் நிலை பொறுப்பாளருக்கான பயிற்சி முகாம் மற்றும் கலந்துரையாடல் கூட்டம் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்று. ஆண்டிபட்டி அருகே க.விலக்கில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை  வளாக கூட்டரங்கில் நடந்த இக்கூட்டத்திற்கு கலெக்டர்  பல்லவி பல்தேவ்  தலைமையேற்று குத்துவிளக்கு ஏற்றி  துவக்கி வைத்து பேசினார். மழைக் காலங்களில் ஏற்படும் இடர்பாடுகளால் பொதுமக்களுக்கு எவ்வாறு உதவ வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு  முதல் சிகிச்சை எவ்வாறு வழங்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல்களை தெரிவிக்க வேண்டும்  என்பது குறித்து கலெக்டர் பேசினர். தேனி மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ராஜேந்திரன், துணைமுதல்வர் எழிலரசன், கண்காணிப்பாளர் இளங்கோவன் உள்ளிட்ட மருத்துவர்களும் மற்றும் வருவாய், தீயணைப்பு துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Northeast ,consultant ,
× RELATED திருவொற்றியூர் திமுக கூட்டத்தில்...