×

வெங்கமேட்டில் கொப்பரை வரத்து சரிவு

பரமத்திவேலூர், அக்.26: பரமத்திவேலூரை அடுத்துள்ள வெங்கமேட்டில் செயல்பட்டு வரும் சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கொப்பரை வரத்து வெகுவாக குறைந்த நிலையில், விலையும் குறைந்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளான பரமத்தி, கபிலர்மலை, ஜேடர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் கொப்பரையை, வியாழக்கிழமை தோறும் பரமத்திவேலூர் வெங்கமேட்டில் செயல்பட்டு வரும் சேலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் ஆயுதபூஜை என்பதால் ஏலம் நடைபெறவில்லை.

அதற்கு முந்தைய வாரம் (அக்.11) நடைபெற்ற ஏலத்தில், அதிக பட்சமாக கிலோ ஒன்றுக்கு ₹92.17 பைசாவுக்கும், குறைந்தபட்சமாக ₹90.15 பைசாவுக்கும் சராசரி விலையாக ₹84.39 பைசாவுக்கும் ஏலம் போனது. மொத்தம் 89,576 ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ஏலத்தில், 740 கிலோ கொப்பரை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. நேற்று அதிகபட்ச விலையாக கிலோ ₹81 க்கும், குறைந்தபட்ச விலையாக ₹75 க்கும் ஏலம் போனது. மொத்தம் ₹46,773 க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த சில தினங்களாக கொப்பரை வரத்து வெகுவாக குறைந்துள்ள நிலையில், நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் வந்த விவசாயிகள், விலையும் குறைந்ததால் ஏமாற்றம் அடைந்தனர்.

Tags :
× RELATED மாடுகள் வரத்து அதிகரிப்பு