×

பொதுமக்கள் பார்வையிட மார்த்தாண்டம் ேமம்பாலம் நவம்பர் 10ம் தேதி திறப்பு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

கருங்கல், அக்.26: மார்த்தாண்டம் மேம்பாலம் பொதுமக்கள் பார்வையிட வரும் நவம்பர் 10ம் தேதி மாலை திறக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.மார்த்தாண்டத்தில்  மேம்பால பணிகள் நடைபெறும் பகுதிகளை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று காலை பார்வையிட்டார். அப்போது பாலப்பணி  தொடங்கும் குழித்துறை பகுதியில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் நடந்து செல்ல  முடியாத நிலையில் இருந்தது. இதனிடையே அமைச்சர் வருவதை அறிந்த அதிகாரிகள்  விரைவாக செயல்பட்டு தண்ணீர் வழிந்தோட நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும்  பாலவேலை நடைபெறும் பல இடங்களில் சாக்குமூடைகள், இரும்புகம்பிகள் குவிந்த  கிடந்ததால் தண்ணீர் வழிந்தோட முடியாமல் நின்றது.இதைகண்ட  அமைச்சர் மற்றும் அவருடன் வந்தவர்கள் களத்தில் இறங்கி தண்ணீர் வழிந்தோட  நடவடிக்ைக மேற்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்த  உஷாரான பாலப்பணி மேற்கொள்ளும் அதிகாரிகள் துரித கதியில் செயல்பட்டு  பள்ளங்களில் தேங்கி கிடந்த தண்ணீரை வெளியேற்ற நடவடிக்ைக எடுத்தனர். பின்னர்  அமைச்சரிடம் பொதுமக்கள், தாங்கள் நடந்து செல்ல பாதை அமைத்து தர உத்தரவிட  வேண்டும் எனக் கேட்டு கொண்டனர். இதையடுத்து அமைச்சர் அதிகாரிகளுக்கு பொதுமக்கள்  நடந்து செல்ல பாதை அமைத்து கொடுக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மார்த்தாண்டம் மேம்பால  பணிகள் 75 சதவீதம் முழுமையாக முடிந்துள்ளது. இன்னும் சில பணிகள் மட்டுமே  பாக்கி உள்ளன. நவம்பர் 10ம் தேதி பாலத்தின் மேல் பகுதி பணிகள் முடிவடைந்து  விடும். அன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக  திறந்து விடப்படும்.அதன்பின் 1 மாதத்தில் பாலத்தின் கீழ் பகுதியில்  உள்ள பணிகளும் முடிந்து விடும். கிறிஸ்துமசுக்கு முன்னால் அனைத்து  பணிகளும் முடிந்து விடும். எனவே வியாபாரிகள் பண்டிகை கால வியாபாரம்  செய்யும் வகையில் பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.18  எம்எல்ஏக்கள் தகுதி நீக்க தீர்ப்பு காலதாமதமாக வந்துள்ளது. இந்த தீர்ப்பு  முன்னதாகவே வந்திருக்க வேண்டும். இடைத்தேர்தலில் பாஜ போட்டியிடுவது குறித்து  முடிவு செய்யவில்ைல. 18 எம்எல்ஏக்களும் நீதிமன்றத்தை நாடுவார்களா? மக்கள  மன்றத்தை நாடுவார்களா? என்பது அவர்களது உட்கட்சி விவகாரம். எங்களது முதல் குறிக்கோள் பாராளுமன்ற தேர்தல் தான்.சபரிமலை  விவகாரத்தில் காவல்துறை பங்களிப்பு குறித்து முறையாக விசாரிக்க வேண்டும்.  கேரள காவல்துறையின் தொப்பி எப்படி தனி நபருக்கு கிடைத்தது? இதை  முழுமையான விசாரணைக்கு உள்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Ponnathirakrishnan ,Marthandam High Court ,
× RELATED பொன்.ராதாகிருஷ்ணன் பேசுவதற்காக...